Tirunelveli

News June 8, 2024

நெல்லையில் ஆர்ப்பாட்டம்

image

திருநெல்வேலியில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு கொடுப்பது எதிர்த்து இன்று (ஜூன்8) ஆர்ப்பாட்டம் நடந்தது. சோசியலிஸ்ட் டெமாக்ரேட்டிக் ட்ரேட் யூனியன் என்ற அமைப்பின் சார்பில் அரசு ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணியை தனியாருக்கு வழங்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News June 8, 2024

நெல்லை: ரத வீதிகளில் போக்குவரத்து மாற்றம்

image

நெல்லையப்பர் கோயில் ஆணி தேரோட்ட திருவிழா ஜூன் 13 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 21ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகளில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டது. சொக்கப்பனை முக்கு வழியாக பஸ்கள், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சுவாமி சன்னதி மண்டபத்தின் முன் மரத்தடி போடப்பட்டு ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மறைக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்த இருவர் கைது

image

அணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எட்வின் ராஜா( 35), வேலு (61). இவர்கள் இருவரையும் திருட்டு வழக்கில் திசையன்விளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்ற தொடர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த அவர்களை திசையன்விளை போலீசார் இன்று (ஜூன் 8 ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

News June 8, 2024

மாஞ்சோலை விவகாரம் பரிசீலனை செய்யப்படும் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை விவகாரத்தில் எஸ்டேட் பணியில் இருந்து வெளியேற விரும்பும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் பட்டா வீடுகளும் வழங்கிட உரிய உதவிகள் செய்திட ஏற்கனவே அரசின் அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த  வேண்டும் என்ற  கோரிக்கை அரசுக்கு பரிசீலனை செய்து அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று உறுதி அளித்தார்.

News June 8, 2024

விடுதியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 8)விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 20 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு மாணவர்கள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

News June 8, 2024

கலைஞர் கனவு இல்லம்: கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 8) விடுத்துள்ள அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் “கலைஞர் கனவு இல்லம்” என்ற திட்டம் அரசால் வெளியிடப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படுகிறது. மறு கணக்கெடுப்பு, புதிய குடிசை கணக்கெடுப்பு, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் இன்று (ஜூன் 8) குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற கூடாது என்பதற்காகவே இந்த சோதனைகள் நடைபெறுவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

News June 8, 2024

நெல்லை பல்கலையில் விண்ணப்ப தேதி மீண்டும் நீட்டிப்பு

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று (ஜூன் 7) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைகழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

ஜெயக்குமார் மரண வழக்கு: கூடுதல் சிபிசிஐடி போலீசார்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கை நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(ஜூன் 7) முதல் விசாரணைக்கு துணையாக தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி போலீசார் ஜெயா பிரின்சஸ் தலைமையிலும், குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலும் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

News June 8, 2024

எஸ்டிபிஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

image

எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அணியான எஸ்டிபியூ நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக இன்று வண்ணாரப்பேட்டை டிப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!