Tirunelveli

News June 9, 2024

பேருந்து நிலையத்தில் கூடிய பெருங்கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் இருந்து கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கப்படுவதால் ஏராளமானோர் இன்று (ஜூன் 9) வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையொட்டி திருநெல்வேலியிலிருந்து சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். மேலும் சென்னை செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

News June 9, 2024

நெல்லை மாவட்டத்தில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழிப்பறி, திருட்டு, கடத்தல் பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் 7ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருந்ததாக ரவுடி ஜேக்கப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News June 9, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு: 13,337 பேர் ஆப்சென்ட்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று (ஜூன்.9) அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 57,778 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 13,337 பேர் தேர்வு எழுத வரவில்லை. 44,441 பேர் தேர்வு எழுதினார் 23 சதவீத பேர் ஆப்சென்ட் ஆகினர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 9, 2024

“க்யூ ஆர்” கோடு மூலம் கருத்து கேட்பு

image

நெல்லை முழுமை திட்டம் செயல்படுத்துவதற்காக உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதற்காக “கியூ ஆர்” கோடு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பேருந்து நிலையம் உள்ள பொது இடங்களிலும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News June 9, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News June 9, 2024

நெல்லையில் சார் பதிவாளர் சஸ்பெண்ட்

image

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உச்சநீதிமன்றத்தால் காப்புக் காடாக அறிவிக்கப்பட்ட 8000 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்ததாக அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் சாந்தியை பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜ்
இன்று சஸ்பெண்ட் செய்தார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணைபோன பதிவு துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 9, 2024

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி

image

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், 12ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஜமா பந்தி நடைபெற உள்ளது, ஜமாபந்தியின் போது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாளில் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயனடையலாம் எனக் கூறியுள்ளார்.

News June 9, 2024

கார் விபத்தில் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

image

மருதம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன். இவரது நண்பர், அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரும் நேற்று இரவு குற்றாலத்தில் குளித்துவிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் ஆலங்குளம் மலைக்கோவில் அருகே வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

News June 9, 2024

நெல்லையப்பர்: 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் வருகை 13-ஆம் தேதி ஆணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் கலையரங்கில் 10 நாள் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நித்யஸ்ரீ மகாதேவன் இன்னிசை, வாசகி சொற்பொழிவு, “ப்யுசன் ” இசை, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரன் சொற்பொழிவு, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

நெல்லையில் ஆர்ப்பாட்டம்

image

திருநெல்வேலியில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு கொடுப்பது எதிர்த்து இன்று (ஜூன்8) ஆர்ப்பாட்டம் நடந்தது. சோசியலிஸ்ட் டெமாக்ரேட்டிக் ட்ரேட் யூனியன் என்ற அமைப்பின் சார்பில் அரசு ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணியை தனியாருக்கு வழங்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!