India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று(செப்.05) விடுத்துள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுப்புற சூழலை நீர்த்துப் போக செய்யும் மத்திய அரசின் சட்ட வரைவுகளை அனைத்து மாநில அரசுகளும் ஜனநாயக சக்திகளும் வலுவாக எதிர்க்க வேண்டும். தமிழக அரசும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரயில் எண்: 06070 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று(செப்.05) மாலை 18.45 மணிக்குப் புறப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த ரயில் குறித்த நேரத்தில் புறப்பட இயலாமல் நாளை(செப்.06) நள்ளிரவு 2 மணி அளவில் (7 மணி 15 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை விநாயகர் சிலைகளை முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்து வைத்து வழிபட அனுமதி கோரி மாவட்ட காவல் துறைக்கு மனுக்கள் குவிந்து வருகின்றன. இவற்றை காவல்துறையினர் பரிசீலித்து உரிய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர். இதுவரை குமார் 325 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய 2 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் செல்வம் என்பவர்(செப்.,1) உயிரிழந்தார். இன்று பிரசாந்த் என்பவரும் உயிரிழந்தார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7ஆம் தேதியும், கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 15ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சென்னையில் இருந்து கேரளாவிற்கு சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி – செங்கோட்டை வழியாக 2 சிறப்பு ரயில்களை இன்று(செப்.,5) அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சியில் உள்ள மணிமண்டபம் மற்றும் பாளை., வ.உ.சி. மைதானம் பகுதியில் உள்ள சிதம்பரனார் சிலைக்கு இன்று(செப்.,5) காலை முதல் மாலை வரை பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மரியாதை செய்யவுள்ளனர். இதை முன்னிட்டு மாநகர போலீசார் இந்த பகுதிகளில் அதிகளவில் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூத்தங்குடியைச் சேர்ந்த அஜித்(32) என்பவர் கடந்த 2ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்கு பதிந்து ஏற்கனவே 5 பேரை நேற்று கைது செய்தார். இதைத் தொடர்ந்து இன்று ரகுமான், அஞ்சிலோ, ஜூலியஸ், அஜய், ரோஜன், செல்வா கில்பர்ட், பார்த்திபன் ஆகிய 8 பேரை கைது செய்தார்.

திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெறும் நிலையில், நாங்குநேரி வட்டாரம் மூலைக்கரைப்பட்டியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய புறவழிச்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் நெல்லையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

மானூர் அருகே குறிச்சி குளத்தில் தாய் மகனை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010ம் ஆண்டு சுப்பிரமணி மற்றும் அவரது தாயார் கோமதி அம்மாள் ஆகியோரை கொலை செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. சிராஜ், நாகூர் மீரன் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ரூ.1000 அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்க கல்வித் துறையில் லிசி, கித்தேரி, உஷா மாலதி, ஜூடி ஆகிய நான்கு பேருக்கும், பள்ளிக் கல்வித் துறையில் லலிதா ரமோணா, ஸ்ரீரேணுகா, லீமா ரோஸ், சாந்தி ஆகிய நான்கு பேருக்கும் நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் இன்று (செப்.3) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.