India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் நடப்பு ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய முழுநேர பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சியாகும். விருப்பம் உள்ளவர்கள் tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 29 காவல்துறை உதவி ஆய்வாளர்களை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜூன் 12) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி உதவி ஆய்வாளர் நஸ்ரின் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் இருந்து தேவர்குளம் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 29 காவலர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழிசை சவுந்தராஜன் அவர்களை, மேடையில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்தது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அமித்ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை நாடார் மகாஜன சங்கம் சார்பில் கண்டனம் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பேசிய நெல்லை மாவட்ட நாடார் மகாஜன சங்க தலைவர் அசோகன், எங்களது சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான போஸ்டர் இது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக மூன்று மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் தூக்கி அடிக்கடி பழுது ஏற்படுவதால் மீதமுள்ள இரண்டு மின் தூக்கி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதை சரி செய்ய பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து இன்றுடன் (ஜூன் 12) 41 நாட்கள் ஆகின்றது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு இந்த கொலை வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை 41 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்ற இந்து முன்னணி நிர்வாகி மற்றும் பாஜக நிர்வாகிகள் பேசிய ஆடியோ வைரலான நிலையில் இன்று (ஜூன் 12) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாநகர காவல் ஆணையாளரிடம் கலவரத்தை தூண்ட நினைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலி மாநகர மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 10 நாள் கொண்டாட்டமான ஆனி பெரும் தேர்த்திருவிழா நாளை (ஜூன் 13) நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 21 ஆம் தேதி தேர் திருவிழாவுக்காக அதிக மக்கள் கூடுவார்கள் என்பதால் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) முதல் நாளை இரவு வரை கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. “கள்ளக் கடல்” என அழைக்கப்படும் இந்த கடல் அலை 2.6 மீட்டர் வரை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட கடலோரப் பகுதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்துள்ளது. இன்று காலை வரை மாவட்டத்தின் நாலு முக்கு பகுதியில் 4, ஊத்து பகுதியில் 3 உட்பட மொத்தம் ஏழு மில்லி மீட்டர் மழை மட்டும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.