India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமன், ஐ..ஜி அன்பு, எஸ்.பி முத்தரசி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், ஒரு முக்கிய நபரின் செல்போன் எண்கள் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் 4ஆம் தேதி கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், நேற்று ஜெயக்குமார் உடல் கிடந்த கரைச்சுத்துப்புதூர் தோட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.20 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தகுதியான தலைமை ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், திருத்தங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் கூறினார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாவுக்கு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவின் 8ஆம் திருநாள் மண்டகப்படி விழாவுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸுக்கு நேற்று நெல்லை மாவட்ட நாடார் சங்கம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. வரும் 21ஆம் தேதி, தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் இன்று ஜூன் 13 விடுத்துள்ள செய்தி குறிப்பு; பாளையங்கோட்டை, நெல்லை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் அட்டை தொடர்பான குறைதீர்க்கும் முகாம் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக இன்று Cbcid Adgp வெங்கட்ராமன், IG அன்பு, SP முத்தரசி ஆகியோர் நேரில் இறுதி கட்ட விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்கொலையா கொலையா என்பதற்கான முடிவு இன்று கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
திருநெல்வேலியில் பயணிகள் அதிகம் விரும்பக்கூடிய ரயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளது. இந்த நெல்லை எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கி இன்றுடன் (13/06/1972- 13/06/24) 52 வருடங்கள் ஆகின்றது. தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் அதிகம் வருவாய் ஈட்டும் ரயில்களில் முதல் இடத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதன் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை போல் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்திலும் தொடங்கப்பட வேண்டும் என நெல்லை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது கருத்தரிப்பு மையம் தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் நலச் சங்க மாநில செயற்குழு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள CITU அலுவலகத்தில் வைத்து இன்று (ஜூன் 13) நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ராமநாதன் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின்சார வாரியத்தை தனியாரிடம் தாரை வார்க்க கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த மர்ம வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 13) எஸ்பி முத்தரசி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.