Tirunelveli

News May 11, 2024

நெல்லை: 3000 பேர் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க ஏற்பாடு

image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றும் (மே 11), நாளையும் (மே 12) நடக்கும் மூன்று போட்டியில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்ச் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் பார்வையிட சிறப்பு ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டியை காண வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என பிசிசிஐ பிரதிநிதி இர்பான் தெரிவித்தார்.

News May 11, 2024

விபத்து குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

image

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகளின் முறையான தொடர் ஆய்வு நடவடிக்கையால் மட்டுமே இவ்வாறு நடைபெறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

நெல்லையில் புகார் அளிக்கும் தேசிய செயலாளர்

image

நெல்லை தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை இன்று (மே 11) மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் ஹென்றி திபேன் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளார். இதில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

image

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நடத்த கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலியில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 10, 2024

கிணற்றிலிருந்து கத்தி மீட்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் மும்முரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி தேடிவந்தனர். அப்போது கத்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்த கத்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 10, 2024

பாளை: பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு 

image

10 -ம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாளை, இக்னேஷியஸ் கான்வென்ட் பெண்கள் பள்ளி மாணவி பவதாரணி 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மாணவியை இன்று (மே.10) பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகளும் சாதனை மனைவியை பாராட்டினர்.

News May 10, 2024

திருநெல்வேலியில் 116 பள்ளிகள் அசத்தல்

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் 93.04% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லையில் 25 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 116 பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்று சென்டம் வாங்கி அசத்தி உள்ளனர்.

News May 10, 2024

அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.

error: Content is protected !!