India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நாளை(ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு நேற்று(ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்படுகிறது. இம்முகாம் வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்யவேண்டும் என தொழில்நெறி வழிகாட்டும் சார்பில் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் நாளை அகத்தியர் மீட்பு குழு சார்பாக அகத்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் வனப்பாதையை மூடிய வனத்துறையை கண்டித்து என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாக எஸ்டிபிஐ நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் இன்று(ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 169 அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் 290 நடத்துநர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு தொடங்கியுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சிகள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனி பெருந்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயில் உள் பிரகாரங்கள், வெளி பிரகாரங்கள், ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளை 150 கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் மொபைல் கேமரா வேன் மூலமும் ரத வீதியை சுற்றி வந்து கண்காணிக்கின்றனர்.
நெல்லைக்கு அல்வா மட்டும் இல்ல படுத்து தூங்கும் பாயும் பேமஸ் தாங்க. இது சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள பத்தமடையில் தயார் செய்யப்படுகிறது. நெல்லை வரும் விஐபிகளுக்கு, நினைவுப் பரிசாக “பத்தமடை பாய்” வழங்கப்படும். இங்கிலாந்தில் உள்ள அரண்மனையில் அலங்கார பொருளாகவும், ஒரு முறை இப்பாயை பார்த்து விக்டோரியா மகாராணியே வியந்துள்ளார். இப்பாயிக்கு 2013ஆம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
நெல்லையில் இன்று சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பேசிய அவர், மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்றார்
நெல்லை வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் நெல்லை விவசாயிகளிடம் பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், உழவர் செயலி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.
நெல்லை மாவட்ட சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.