Tirunelveli

News May 13, 2024

நெல்லையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

அரசு கல்லூரியில் சேர மாணவிகள் ஆர்வம்

image

அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு அரசு கல்வி உதவி தொகை 1000 ரூபாய் வழங்குகிறது. இதன் காரணமாகவும் குறைந்த கட்டணம் என்பதாலும் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் பல அரசு கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவிகள் விண்ணப்ப எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

News May 12, 2024

43 மணி நேரம் பயணம் செய்த ஜெயக்குமார்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPKஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி தோப்பு விளைக்கு செல்வதற்காக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 43 கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளார். தனது வீட்டில் இருந்து கரைசுத்து புதூர் வழியாக தோப்பு விளைக்கு செல்வதற்கு வெறும் 15 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் 43 கிலோ மீட்டர் சுற்றி சென்று தோப்பு விளையை அடைந்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 12, 2024

நெல்லைக்கு வந்த இயக்குனர் வெற்றிமாறன்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இன்று (மே 12) பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்தார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரசிகர்களுடன் பல்வேறு சினிமா அனுபவங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இயக்குனரின் வருகையால் திரையரங்கில் விழாக்கோலம் பூண்டது.

News May 12, 2024

மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் ஆய்வு

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

News May 12, 2024

நெல்லையில் கொலை; சிக்கிய தடயம் 

image

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு பேன்சி கடையில் டார்ச் லைட் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து அந்த டார்ச் லைட் நேற்று (மே 11) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டார்ச் லைட்டை தடவியல் நிபுணர்கள் குழுவினர் ஒரு முக்கிய தடயமாக கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

நெல்லையில் கோர விபத்து; இருவர் மரணம்

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

நெல்லையில் கோர விபத்து; இருவர் மரணம்

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

நெல்லை:3 ஆண்டுகளில் 9.64 கோடி மகளிர் இலவச பயணம்

image

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது வரை நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 9.64 கோடி மகளிர்,மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

News May 11, 2024

நெல்லையில் நாளை மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

error: Content is protected !!