India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் மருதபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் முன்பு இன்று (மே 13) மண்ணெண்ணெய் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். சொத்து பிரச்சனை காரணமாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தீ வைத்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட டார்ச் லைட் திசையன்விளை கடையில் வாங்கியதுதான் என்பதை அந்த கடைக்கு சென்று தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளனர். எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் நேர்மையான முறையில் வெளிப்படையான, சுதந்திரமான முறையில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்பி சிலம்பரசன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சியால் நேற்று மணிமுத்தாறு, நாங்குநேரி பாபநாசம், சேர்வலாறு, களக்காடு, காக்காச்சி, நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலு முத்து பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அதிநவீன சேர்க்கை உற்பத்தி திறன் கொண்ட 3d தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிஎஸ் 4 இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை நேற்று நடைபெற்றது. 665 வினாடிகள் வரை விஞ்ஞானிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ராக்கெட்டை செலுத்துவதற்கான உந்து விசைத்திறன் கவுண்டவுன் தொடங்கி வெற்றி பெற்றது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சில நாள்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இது வரையிலும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கூலிப் படையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (மே 13) காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 562 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் 60 நாட்களுக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர்கள் அனைத்து கண்டக்டர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு நேற்று அனுப்பி உள்ள உத்தரவில் ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது, சந்தேகம் இருப்பின் அவரது பிறந்தநாள் சான்றிதழ் வாங்கி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி டவுண் கட்டாக் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி அல்ஹாபிழ் எம். ஜமால் முகைதீன் ஆலிம் இன்று (மே 13) அதிகாலை ஒரு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பேட்டை ரஹ்மானியா ஜமாஅத் பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவருடைய மறைவிற்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ஆலிம்கள் உலமாக்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் ஜெயக்குமாரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் நேற்று விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி கூறுகையில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்வில் தவறிய, பள்ளிக்கு பாதியில் வராமல் சென்ற மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதனை தொடர்ந்து வரவிருக்கும் துணை தேர்வில் அவர்களை பங்கேற்க வைத்து படிப்பை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் அதற்கான வகுப்பு தொடங்கப்படும் என நேற்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.