Tirunelveli

News June 22, 2024

17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற தேரோட்டம்

image

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆனி தேரோட்டம் காலை 7 மணிக்கு துவங்கியது. இதனை தொடர்ந்து வடம் அறுந்து விழுந்து பல்வேறு சீரமைப்புக்கு பின்பு தேரோட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து இரவு 12:30 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. அந்த வகையில் மொத்தம் 17 மணி நேரத்திற்கு மேலாக தேரோட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 22, 2024

நெல்லை: தந்தைக்கு உதவிய மகன்!

image

நெல்லையப்பர் கோயிலில் நேற்று(ஜூன் 21) ஆனி தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் ஆரம்பித்தபோதே வடங்கள் அறுந்து விழுந்து அதிர்ச்சி தந்தாலும், இரும்பு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு, மக்களும் கை கோர்த்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து வடம் வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை, தந்தைக்கு உதவிய மகன் என மக்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

News June 21, 2024

கம்யூ அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் 13 பேர் மீது வன்கொடுமை வழக்கு

image

ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் மார்க்.,கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிய வேண்டும் என்று கூறி மார்க்., கம்யூ. கட்சியினர் நெல்லையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கிய 13 பேர் மீதும் வன்கொடுமை வழக்கு இன்று (ஜூன்.21) பதிவு செய்யப்பட்டது.

News June 21, 2024

நெல்லை இளைஞர்களே முக்கிய தகவல்

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 23ம் தேதி பாளை சேவியர் கல்லூரியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் சார்பில் இலவச கருத்தரங்கை நடைபெறுகிறது. இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்தரங்கில் ஊக்க உரை ஆற்றுகிறார். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் 9626252500 இந்த எண்ணில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 21, 2024

மாஞ்சோலை மக்களை வெளியேற்ற விதித்த தடை தொடரும்!

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கபட்ட தொடரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், அரசின் ‘tantea’நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது குறித்து தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்த நிலையில் மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News June 21, 2024

நெல்லை: 3 நாள் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு(ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 21, 2024

நெல்லை தோரோட்டம்: 2வது முறை அறுந்த வடம்!

image

நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேரோட்ட விழா இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என தேரை வடம் பிடித்து இழுக்கும்போது 3 வடம் அறுந்து விழுந்தது. இதனை 1 மணி நேரத்தில் சரிசெய்து பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தேரை வடம் பிடித்து இழுத்தபோது 4வது வடமும் அறுந்து விழுந்தது. இதனால் மீண்டும் தேர் இழுப்பது தாமதமாகியுள்ளது.

News June 21, 2024

நெல்லை: தேர் வடம் அறுந்ததால் தாமதம்

image

நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி தேரோட்டம் இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர், எம்பி, மேயர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் வடம் திடீரென அறுந்தது. இதை தொடர்ந்து வடத்தை மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News June 21, 2024

புறப்பட்டார் நெல்லையப்பர்!

image

திருநெல்வேலி மாநகரின் மிக முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெறும் சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயில் ஆனி தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வந்தி நலையில் தேரோட்டம் இன்று(ஜூன் 21) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கே பக்தர்கள் திரண்டனர். 6.30 மணிக்கு பல்வேறு பாராயணங்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது.

News June 20, 2024

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 20) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவி குழு சிறு கடன் கைவினை கலைஞர்களுக்கான கடன் கல்வி கடன் வழங்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.

error: Content is protected !!