India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது, இடிந்தகரை மற்றும் கூடங்குளம் பகுதி மக்கள் மீது போடப்பட்டது. வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை சில வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. மீதி வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்குநேரி அடுத்த திருக்குறுங்குடியில் உள்ள மலை நம்பி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்திட வேண்டுமென நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நேற்று சட்டசபையில் வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு வனப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ், எம்.பி.யாக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் மீது ஒரு வழக்கு மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. எனவே, அவர் எம்.பி.யாக பதவியேற்க விடக்கூடாது என பாஜக நெல்லை மாவட்ட செயலாளர் வெங்கடாசலபதி நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.
நெல்லை மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க பாடுபடுவேன் என நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “நெல்லையை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்கவும், குலவணிகர் புரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டவும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவேன். தொகுதி முழுவதும் சென்று மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு கிடைக்க முயற்சி எடுப்பேன்” எனக் கூறினார்.
பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோதமான மதுபானங்களை ஒழிப்பதற்காக, நெல்லை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது குறித்து தெரியவந்தால் 94981 01765 மற்றும் 94981 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை கண்டித்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன் 22) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவும் நேற்று (ஜூன் 21) சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு கடிதம் எழுப்பி உள்ளார். அதில் 202ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலை சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட இடிந்தகரை மக்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை முதலமைச்சர் ஆணைக்கிணங்க ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில், நெம்புகோல் வைப்பதற்கு முன்பு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்ததே வடம் அறுபட காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆனித் தேரோட்ட திருவிழா காலை 7 மணிக்கு துவங்கியது. அப்போது தேரின் வடம் அறுந்து விழுந்தது. இது குறித்து கேள்வியெழுந்த நிலையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 22) விளக்கம் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.