Tirunelveli

News November 17, 2024

கண்ணபிரான் உட்பட 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

image

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான், இவரது கூட்டாளிகள் ராக்கி, சிவா ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.இவர்கள் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சமூக பதற்றத்தை உருவாக்கி வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 17, 2024

முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டும் – காவல்துறை

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா ஆலோசனைப்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு மாநகர காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனங்களில் அளவுக்கு அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துள்ளனர்.

News November 17, 2024

நெல்லை மாவட்டத்திற்கு இன்று கனமழை

image

தமிழகத்தில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

நெல்லையில் ரூ.104 கோடியில் புதிய பணிகள் – அமைச்சர் தகவல்

image

நெல்லையில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அளித்த பேட்டியில், ரூ.72 கோடியே 10 லட்சம் செலவில் மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் மார்ச் மாத இறுதியில் பணி முடிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்படும். ரூ.104 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிட பணிகள் நடந்து வருகிறது என்றார்.

News November 17, 2024

“இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 70% பேர் தமிழ்நாடு”

image

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு அங்கிருந்து ஆக்லாந்து தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று(நவ.,16) கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 70% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். வளர்ந்த, முன்னேறிய நாடுகளை எல்லாம் கடந்து தமிழ்நாடு உள்ளது என்று பேசினார்.

News November 17, 2024

பாளை., GH-ல் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

பாளை., அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று(நவ.,17) நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்பி, பாளை., எம்எல்ஏ அப்துல் வஹாப், மருத்துவமனை டீன் ரேவதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 17, 2024

அதிமுக நெல்லை மருத்துவர் அணி மா.செ. நியமனம்

image

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா ஒப்புதலுடன், மருத்துவ அணி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மருத்துவர் அணியின் மாநகர் மாவட்ட செயலாளராக பல் மற்றும் முகம் தாடை சீரமைப்பு நிபுணர் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட சார்லஸ் பிரேம்குமார் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவை நேற்று(நவ.,16) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News November 17, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விவரம்

image

இன்று(நவ.,17) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான புதிய கட்டட மற்றும் மருத்துவ பிரிவுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார்.#இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்அட்டை திருத்தம் பெயர் சேர்த்தல் முகாம் 2ஆவது நாளாக நெல்லை மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

News November 16, 2024

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம் தெரிவித்த எம்எல்ஏ

image

எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் வீர மரணம் அடைந்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் திரைப்படம். மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. நெல்லையில் தியேட்டர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு

image

மதுரை கோட்டம் ரயில்வே ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராம் சிங் இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தியோதயா அதிவிரைவு ரயிலில் பயணிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து பின்னர் உணவின் சுகாதாரம் மற்றும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் சுகாதாரத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஏராளமானோர் உடன் இருந்தனர்.