India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா இன்று (ஜூன் 24) விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்ட கேஸ் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை(25ம் தேதி) பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும். கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று(ஜூன் 24) வெளியான அறிக்கையில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் 99941-73313 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி துறைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மாவட்ட கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியல் நாளை(ஜூன் 25) வெளியிடப்படுகிறது. ஜூலை 1 அன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளதாக தகவல். தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று(ஜூன் 24) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிட்டதக்கது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலி பணியிடம் நிரப்புவது, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூன் 24) காலை 10 மணி முதல் நெல்லை தாமிரபரணி பணிமனை முன் 24 மணி நேரம் உண்ணாவிரதம் 25ம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி இன்று கூறியதாவது, நெல்லை டவுனில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 770ம் ஆண்டு ஆட்சி செய்த பராந்தக நெடுஞ்சடையன் காலத்து கல்வெட்டாகும். இதில் திருநெல்வேலி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நெல்லைக்கு வயது 1254 ஆண்டுகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் செய்தி குறிப்பு: மாநகரில் மாடுகளை பொது இடங்களில் சுற்ற விடக்கூடாது என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு சிலர் இந்த செயலை செய்கின்றனர், இன்று பாளையங்கோட்டை உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு 47 மாடுகள் பிடிக்கப்பட்டு, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கட்சியின் இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது, இடிந்தகரை மற்றும் கூடங்குளம் பகுதி மக்கள் மீது போடப்பட்டது. வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை சில வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. மீதி வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.