India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளை சேவியர் கல்லூரியில் இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் தடுப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி பேசியதாவது, மது மட்டுமல்ல சாதியும், மதமும் போதைதான். சாதி என்ற சாக்கடை எண்ணத்தை தூக்கி எறியுங்கள் என்றார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மணிமுத்தாறு அருவியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவ பயிற்சி 36 குழுவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று (ஜூன் 25) பல்வேறு மையங்களில் தொடங்கியது. இதன் மூலம் 1,408 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார். இன்றும் பயிற்சி நடைபெறுகிறது.
தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது, தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நேற்று (ஜூன் 25) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் குழு அமைத்து தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தேர் பழுதடைந்து விட்டதால் ரூ.59 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்களின் வடங்கள் பழுதாகி விட்டதால் ரூ.24 லட்சம் மதிப்பில் 6 புதிய வருடங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அப்பகுதியில் 5 தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். குத்தகை முடியும் நிலையில் அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவர்களை நேற்று(ஜூன் 25) சந்தித்த த.மு.மு.க நிறுவனர் ஜான்பாண்டியன், தொழிலாளர்களின் நிலையை தமிழக அரசுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இந்த தகவலை கூறினார்.
நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 25) விடுத்துள்ள அறிக்கை: சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், பகுதி கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. எனவே தகுதி உள்ள குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஜூலை 1ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9440 94 357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியின் காங். வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் இன்று எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குமரியை சேர்ந்த வழக்கறிஞரான இவர், மாவட்ட காங்கிரசில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது முதல் முறையாக எம்பியாகி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.