India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று(ஜூன் 28) தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022, 2023 ஆகிய 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தந்துள்ளது. இதையடுத்து விவசாய வசதிக்காக பல்வேறு பாசன கால்வாய்களில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது .மழையின் காரணமாக நாளை 28ம் தேதி முதல் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்று இரவு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தடை வித்துள்ளார்.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் பழுது நீக்க திட்டத்தின் கீழ் பகுதி வாய்ந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 30ம் தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி உள்ள விடுபட்ட நபர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று(ஜூன் 27) கூறியதாவது, பள்ளிகளில் பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்கிற தகவலால், இதனை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சுற்றுச்சூழல் மன்றங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியைகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூன் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் நடவடிக்கை அமையும் என்பதால் இந்த இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சொந்தக் கட்டடங்களில் இயங்கும் தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்களை கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியே செல்பவர்கள் குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 26) விடுத்துள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினருக்கு சிறு தொழில் வியாபாரம் செய்வதற்கான கடனுதவி வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ. 211 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.