India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என நெல்லை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான விளக்க அறிவிப்புகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறது.
வீட்டிலேயே மொபைல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் யோகா பயிற்சி வீடியோவை பார்த்து மேற்கொள்வதற்கான வசதியை திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கல்லூரியில் “QR code” வழங்கப்படுகிறது. இதை ஒரு முறை ஸ்கேன் செய்து செல்போனில் பதிவேற்றம் செய்தால் இதன் மூலம் பார்த்து யோகா பயிற்சியை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 17) சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு ஆய்வாளர் தலைமையில் 90 காவலர்கள் வந்தனர். பேரிடர் மீட்பு பணிகளுக்காக அவர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 18 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி இன்று (மே 17) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருநெல்வேலியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருநெல்வேலியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் வருகிற மே 22 ஆம் தேதி அன்று தாமிரபரணி அவதார நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. தாமிரபரணி தாய்க்கு பல்வேறு அலங்கார பொருட்கள் சீர்வரிசையாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . தொடர்ந்து சிறப்பு தீப ஆரத்தி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மே 17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மரத்தடி, பழைய கட்டிடங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகளில் நிற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் மருந்தாக்கவியல் பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு கடைசி நாள் வருகிற 22ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.