Tirunelveli

News May 18, 2024

நெல்லை அணைகள் நிலவரம்!

image

நெல்லை மாவட்டத்தில் வானிலை சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(மே 18) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியானது. இதுவரை பாபநாசத்தில் 50 அடியும், மணிமுத்தாறு 85 அடி, சேர்வலாறு 62 அடி, பச்சையாறு மற்றும் கொடுமுடி ஆறு அணைகளில் 12 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர் வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News May 18, 2024

நெல்லை: புது மாப்பிள்ளை வெட்டிப் படுகொலை!

image

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நேற்று (மே 17) வழக்கம்போல் வேலையை முடித்துவிச்சு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். மணிக்கூண்டு அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இசக்கிமுத்துவிற்கு கடந்த மாதம் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும் 2 அருவிகள்

image

நேற்று குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவிகளை தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News May 18, 2024

பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்றும் ( மே18) நாளையும் மிதமானது முதல் ‘கனமழை’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தால் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 18, 2024

நெல்லை மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

News May 18, 2024

ராதாபுரம்: கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.2 லட்சம்

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே மின்னொளி கபடி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இருபாலர் பங்கேற்கும் மின்னொளி கபடி போட்டியை நேற்று(மே 17) இரவு முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.2 லட்சமும், 2ம் பரிசு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

News May 18, 2024

சேரன்மகாதேவியில் கரடி – காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்று வரவும் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ, வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளனர்.

News May 18, 2024

அம்பை அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை!

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் மகேஷ் சுப்ரமணியன் கூறியதாவது, தொழிற்பயிற்சிக்கு 8,10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் மேல்நிலைப் படிப்பு, பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநின்ற மாணவர்கள் மாணவிகள் அனைவரும் நேரில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள் என நேற்று கூறியுள்ளார்.

News May 18, 2024

நெல்லை – தென்காசி சாலையில் திடீர் பனி மூட்டம்!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தொடர்ந்து மாலை இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று(மே 18) அதிகாலை சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை – தென்காசி சாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் சென்றன.

News May 18, 2024

நெல்லை: நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி!

image

பாளை., கேடிசி நகரை சேர்ந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு கடந்த பிப்.21ம் தேதி SMS லிங்க் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை அவர் கிளிக் செய்தபோது தேசிய வங்கியின் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை தெரிவிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் வாலிபர் தனது அக்கவுண்ட் நம்பர், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்தவுடன் அவரது அக்கவுண்டில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது.

error: Content is protected !!