India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையில் மின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நேரங்களில் கால்நடைகளை மின்கம்பங்கள் அருகில் செல்ல விடாதீர்கள், மின் கம்பிகள் அருகே கால்நடைகளை கட்ட வேண்டாம். இதனால் மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம் என மின்வாரியம் இன்று (மே.19) தெரிவித்துள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மே.19) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லையில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான மும்பை நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைய உள்ளது. பல தலைமுறையாக பணியாற்றும் தொழிலாளர்களை வெளியேற்று பணி நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன. எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அரசு, தனியார் ஐடிஐகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என ஆட்சியர் கார்த்தியின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தார். அதில், விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூன்.7ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு 8903709298, 9486251843, 9499055790 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் வரும் ஜூன்.3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் ஜூன்.3ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 101 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (மே.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில், திமுகவினர் அனைவரும் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்திற்கு இன்று (மே.19) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த வரும் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை எந்த நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் கால்நடைகள், வாகனங்களை நீர் நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு சில இடங்களில் மற்றும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று (மே18) கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வள்ளியூர் புறவழிச் சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்ததால் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் நேற்று(மே 17) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அயன் திருவாலீஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி, வயல் பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு காளை மாடு, ஒரு பசு மாடு மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (மே 18) காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 274.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ, நம்பியார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்துக்கு இன்றும்(மே 18), நாளையும்(மே 19) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் கண்காணிப்பில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.