India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகர டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீத் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று (மே 20) இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவரை இழந்து வாடும் ஜமாத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடி,156 உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.86 அடி,118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.40 அடி காணப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது.
நெல்லையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 24ல் தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடக்க உள்ள நிலையில் அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் ஓடுமா? என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க மொபைல் போன் மூலம் பயணச்சீட்டு பெரும் வசதி மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசுகலைக் கல்லூரிகளிலும் புதிய கல்வி ஆண்டில் இளங்கலை பாடப்பிரிவில் சேர்ந்து பயில்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பு இன்றுடன் (மே 20) நிறைவுபெறுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தால் மாணவ, மாணவிகள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மாணவர்கள் ராக்கி செய்ததாக கடந்த வாரம் புகார் எழுந்தது. துணை வார்டன் டாக்டர் கண்ணன் பாபு கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இரு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் சிலரின் விடுதி அறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று (மே 19) இரவு ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும்,தொடர்புக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை அமைக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் மோசடி செய்பவர்கள் டெலிவரி ஏஜெண்ட் போல் நடித்து பார்சலை கொண்டு வந்து டெலிவரி கொரியரில் பணம் தருவதாக கூறுவர். அத்தகைய டெலிவரியை நம்பாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே 19) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று நெல்லை மாநகரம் முழுவதும் வெளுத்து வாங்குவதால் மக்கள் எச்சரிக்கை அச்சத்தில் இருந்து விடுபட்டுள்ளனர் .
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எவ்வித பேரிடரையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் அனைத்து வகைகளிலும் தயாராக உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மே.19) தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.