India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய் மூலம் 16,000 ஏக்கர் பாசனம் மற்றும் 52 குளங்கள் நீர் பாசனம் பெறுகின்றன. தற்போது ராதாபுரம் கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முதல்வருக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு இன்று இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் தீபக் ராஜன் என்பதும் அவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர் இங்கு போதுமான அளவு டிக்கெட் கவுண்டர்கள் இல்லை. அதனால் ரயில் வரக்கூடிய சமயத்தில் கவுண்டரில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கின்றனர். அதனால் கூடுதல் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என்பது பயணிகளின் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் இன்பதுரை இன்று (மே 20) தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வள்ளியூர் வழியே செல்லும் அனைத்து அரசு புறநகர் பேருந்துகளும் வள்ளியூருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும் மர்மம் என்ன? ராதாபுரம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? என சபாநாயகர் அப்பாவுவை குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று (மே 20) நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கைப்பேசிக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சார்பில் திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம் என குறுஞ்செய்தி வந்ததால் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று (மே 20) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று இரவு வள்ளியூருக்கு போகாது எனக் கூறி பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வாக்குவாதம் செய்து பேருந்தை அங்கேயே நிறுத்தினர். இது குறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்துக் கழக மேலாளர் அந்த ஓட்டுநர் நடத்துநரை பணியிட நீக்கம் செய்தனர்.
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தமிழக முதல்வருக்கு இன்று (மே 20) கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் கால்வாய் மூலம் பாசன பெறும் 52 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரையில் தினமும் 150 கன அடி வீதம் ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீது இன்று மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு முன்னாள் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான மைதீன்கான் இன்று (மே 20) இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர். சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே இசக்கிமுத்து என்பவர் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் இன்று (மே 20) குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் பிரபல ரவுடி கொக்கி குமார் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.