India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியதாவது: நெல்லை மாவட்டம் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் குடிநீருக்காக மட்டுமே ரூ.1028 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார் .

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிராமப்புற பெண்களுக்கான தொழில் முனைவோர் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் முயற்சி நேற்று (செப்.27) நடைபெற்றது. துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பதிவாளர் சாக்ரட்டிஸ் தொடங்கி வைத்தார். குமரி ஜேசிபி ஜோன் தலைவர் மகளிர் திட்ட இயக்குனர் லக்குவணன் மற்றும் பலர் பேசினர்.

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் நேற்று (செப்.27) நெல்லை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (செப்.27) வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் மிக அதிகபட்ச பதிவாக இன்று 103 டிகிரி வெப்பம் கங்கைகொண்டான் மற்றும் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை வட்டாரத்தில் பதிவானது. இதன் காரணமாக சாலைகளில் சென்றவர்கள் புழுக்கத்தால் மிகுந்த அவதிப்பட்டனர். இரவிலும் வெப்பம் உணரப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக ரூ.65 கோடி மதிப்பில் புதிய புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(செப்.27) நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பெங்களூரில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து பாளையங்கோட்டை டார்லிங் நகர் அருகே பயணிகளை இறக்கி விடுவதற்காக சர்வீஸ் ரோட்டில் நிறுத்தாமல் பாலத்தின் அருகே நிறுத்தியதால் பின்னே வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் ஆறு பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் சங்கர் ஜிவால் இன்று(செப்.27) பிற்பகல் திருநெல்வேலி மாநகர மற்றும் சரக அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம், நடத்த உள்ளார். இதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. நாளை(செப்.28) காலை 9.15 மணிக்கு காவலர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்த உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நாளை(செப்.,28) தொடங்கி அக்.,6 ஆம் தேதி வரை விடப்படும் நிலையில் அக்.,7ம் தேதி பள்ளி திறக்கும் நாளில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2 ஆம் பருவ பாட புத்தகம் வழங்கவும் சத்துணவு சாப்பிடும் தகுதி உள்ள மாணவர்களுக்கு 2 ஆவது செட் சீருடை வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லையில் நேற்று கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு, புகார்தாரர்(பாதிக்கப்பட்டவர்) வழக்கின் வாதத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, வக்கீல் கந்தசாமி புகார்தாரர் தீர்ப்புக்காக கோயிலில் வேண்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி சுரேஷ் குமார், தாராளமாக வழிபட சொல்லுங்கள் தீர்ப்பை பொறுமையாக சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.