Tirunelveli

News March 14, 2025

சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வக்கீல் கைது

image

சேரன்மாதேவியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சேரன்மகாதேவியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய வழக்கறிஞர் ராஜா ராம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 14, 2025

நெல்லை இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-13] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை  திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

பெற்றோர்களுக்கு மாநகர காவல்துறை அறிவுறுத்தல்

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி மாநகர பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதைதடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இன்று(மார்ச்.13) மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், 18 வயது பூர்த்தியடையாத தங்கள் குழந்தைகள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

News March 13, 2025

நெல்லை மாவட்டம் மழை நிலவரம் வெளியானது

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சம் சிங்கம்பட்டி அடுத்த மாஞ்சோலை ஊத்து பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மழை நாலுமுக்கு பகுதியில் 4 மி.மீ மழை, பாபநாசத்தில் 4 மி.மீ மழை, கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

News March 13, 2025

மார்ச்.31க்குள் கைரேகை பதிவு செய்ய வலியுறுத்தல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏஏ ஒய் மற்றும் பி எச் எச் குடும்ப அட்டைதாரர்கள் அரசு வழங்கும் அனைத்து சிறப்பு சலுகைகள், நலத்திட்டங்களை தொடர்ச்சியாக பெறுவதற்கு குடும்ப அட்டைகள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். *ஷேர் பண்ணுங்க

News March 13, 2025

பணம் அனுப்பும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்: காவல்துறை

image

ஒருவரின் முகநூல்பக்கத்தில் உள்ள போட்டோக்களை திருடி அதே போன்று ஒரு முகநூல்பக்கம் உருவாக்கி, அதில் இருந்து friends request கொடுத்து FB A/Cல் ஒருவர் இணைந்ததும் அவரிடம் Facebook Messenger மூலம் அவசரமாக பணம் தேவைப்படுவதாக பணத்தை ஒரு மொபைல் எண்ணை கொடுத்து Gpay & phonepay போன்றவற்றில் செலுத்துமாறு கேட்கின்றனர். எனவே பணம் கேட்போரை நேரில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு காவல்துறை எச்சரிக்கை.

News March 13, 2025

நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.99.82 கோடி – எம்பி

image

நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.99.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் கிழக்கு ,மேற்கு வாயில்கள் கட்டடங்கள், பாலங்கள், நடைமேடைகள், பார்சல் சர்வீஸ் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளது. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது என்றார்.ஷேர் பண்ணுங்க

News March 13, 2025

நெல்லையில் 27,716 விவசாயிகள் அடையாள எண் பெற்றனர்

image

நெல்லை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் இதுவரை 27,716 விவசாயிகள் மட்டுமே மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு பதிவு செய்து விவசாயிகள் அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசின் மானியங்கள் அனைத்தும் பெற முடியும் என்றார்.

News March 13, 2025

பிறந்தநாளன்று மாணவன் மரணம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 2ம் ஆண்டு படித்த இன்பராஜ்(21), கதிர்(21), ஆகியோர் டூவீலரில் சென்றனர். மாவடி விலக்கு பகுதியில் வந்தபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்புறம் இருந்த இன்பராஜ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று அவரது பிறந்தநாள். படுகாயமடைந்த கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானூர் போலீஸ் விசாரணை.

News March 12, 2025

நெல்லை: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்12] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!