India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 13) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 27 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 7,598 தேர்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 5 ஆயிரத்து 75 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 2524 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வி.கே.புரம் வி.ஏ.ஓ. அலுவலகம் முன்புள்ள மரத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உருவபொம்மையை தூக்கில் தொங்கவிடுவதுபோல் கட்டிச் சென்றனர். நகர தலைவர் முருகேசன் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிந்த போலீசார் நகர பாஜக மகளிர் அணி செயலாளர் சந்தன குமாரி கணவர் பாண்டிராஜாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து பாஜக மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரனை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை ஆணையர்கள் ஆதர் பஷேரா, கீதா ஆகியோர் மேற்பார்வையில் நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று(ஜூலை 12) காலை முதல் இரவு வரை 26 இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆவணங்கள் சரியாக இல்லாமல் இயக்கியது, மது அருந்தி இயக்கியது, போக்குவரத்து விதி மீறல் உள்ளிட்ட 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் பாஜக & காங்கிரசார் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே காங். தலைவர் செல்வப்பெருந்தகை உருவப் பொம்மையை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். இது சர்ச்சையான நிலையில் வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் வி.கே.புரம் நகர பாஜக மகளிர் அணி செயலாளர் சந்திரகுமாரியின் கணவர் பாண்டி ராஜாவை நேற்று கைது செய்தனர், தொடர்ந்து பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று(ஜூலை 12) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 12) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு பாளை., சாராள் தக்கர் பள்ளியில் நடக்கிறது. தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால், கடற்கரை கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பணிகளை செய்ய வேண்டும் என, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நேற்று(ஜுலை 11) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை வேளாண் இணை இயக்குநர் நேற்று(ஜூலை 11) விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கார் பருவ நெல் வாழைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் 2% காப்பீட்டு தொகை செலுத்தினால் போதுமானது. நெல் பயிருக்கு 31ம் தேதியும், வாழைக்கு செப்.16ம் தேதியும் கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு ‘14447’-ல் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், போலியாக கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பல மோசடி செய்திகள் அதிகம் புழக்கத்தில் வருகின்றது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் உதவிக்கு மாவட்ட காவல்துறையை அணுகும்படியும் கேட்டு கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.