India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட பகுதியில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதனையடுத்து பகலில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இரவில் ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம், செட்டிகுளம், சம்பன்குளம், கருத்தப்பிள்ளையூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ராட்சத அலைகளும் எழும். காயல்பட்டினம் முதல் குளச்சல் வரை உள்ள கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் ராஜா இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்ல வனத்துறை இன்று (மே. 22) தடை விதித்துள்ளது. வரும் மே 23 முதல் 25 வரை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனை ஒட்டி நம்பி கோவில் சூழல் சுற்றுலா செல்லும் பாதை இன்று முதல் மூடப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்பட மாட்டாது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலையை அரசு எடுத்து நடத்திட, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரி வருகிற 24ஆம் தேதி அம்பை கல்யாணி தியேட்டர் அருகில் மாலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது .இதில் எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சுத்தமல்லியில் உள்ள தாமிரபரணி தடுப்பணையில் தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. இவ்வாறு தாமிரபரணியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் தடுப்பணையில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இன்று (மே 22) தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
பாபநாசம் அணை திருநெல்வேலியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 143 அடிவரை நீரைத் தேக்கி வைக்க முடியும் இந்த அணை, ஆங்கிலேயர் காலத்தில் 1942 கட்டப்பட்டது. இது 147 ச.கி.மீ பரப்பளவு, சுமார் 240 மீ உயரம், 5.4மீ அகலம் மற்றும் 265 மீ நீளம் கொண்டது. இந்த அணையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியையும் தருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் 48 சிறுவர்கள் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் 58 கொலைகள், புறநகரில் 182 கொலைகள் என ஆக மொத்தம் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஆணவக் கொலை ஒன்றும், முன்விரோத கொலைகள் 45, சாதி ரீதியான கொலைகள் 16 என பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம் சார்பில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக “க்யூ ஆர்” கோடு முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த நவீன முறை திருநெல்வேலி மாநகர் பழைய பேட்டை மின் பிரிவு அலுவலகத்தில் இன்று (மே 22) செயல்பாட்டுக்கு வந்தது. இதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து மின் கட்டணம் செலுத்த வந்த மின் நுகர்வோர்களுக்கு உதவி மின் பொறியாளர் அருணன் செயல் விளக்கம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.