India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளையங்கோட்டையில் வாலிபர் தீபக் ராஜா கொலையில் ஈடுபட்டது கூலிப்படை நபர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பல்வேறு இடங்களில் தீபக் ராஜாவிற்கு குறி வைத்ததும் சம்பவ நாளில் ஓட்டல் முன் திட்டமிட்டபடி அவரை தீர்த்துக் கட்டியதும் தெரியவந்துள்ளது. இக்கொலைக்கு பின்னணியில் எதிர் தரப்பைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தேவகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 38 பேர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று (மே.23) மாலை மத்திய சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வருவதாக வந்த தகவலையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் பாளை மத்திய சிறை முன்பு கூடி கோசம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வழியாக தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் சென்று வந்து கொண்டிருந்தது. முதலில் ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்காலிகமாக இந்த ரயில் நின்று சென்று கொண்டிருக்கிறது. மேலும் இன்று இந்த ரயில் நிலையத்தில் நிரந்தரமாக நிற்பதற்கு இன்று தெற்கு ரயில்வே ஆணை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (மே 23) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் எரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரண வழக்கில் 11 தனிப்படை அமைத்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனை அடுத்து இன்று காலை இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி முழு கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 254.75 கன அடி தண்ணீரும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக இன்று(மே 22) காலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகாசி விசாக தினத்தில் தாமிரபரணி நீர் தோன்றிய நாளாக கருதி பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று(மே 22) நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்தாலக்குறிச்சி தாமிரபரணியில் பூரணகும்பம் ஊர்வலமாக எடுத்து வந்து தாமிரபரணிக்கு 21 அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நெல்லை மாவட்டம் களக்காடு சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 23) முதல் மே 25 ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் மூடப்பட்ட தலையணைக்கு கடந்த 2 நாட்களாக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பக வனச்சரக பகுதிகளில் 34 குழுக்களைச் சேர்ந்த 250 வனப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். கனமழை மற்றும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் திருக்குருங்குடி நம்பி கோவில் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று(மே 22) கூறுகையில், அஞ்சலக அடையாள அட்டை என்ற சேவை மூலம் மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெறலாம். இந்த அட்டை ஆதார் அட்டையில் முகவரி திருத்தம் மாற்றம் செய்யவும், வங்கி அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் ஒரு சான்றாக பயன்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.