India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் வழியாக இயங்கும் 06029/06030 மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகம் தாக்கரே ஞான தேவராவ் இன்று (மே 24) விடுத்துள்ள அறிக்கை: சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து மகிழ்ச்சி நகர் தரை தள நீர் தொட்டிக்கு வரும் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் மே 28, 29 ஆம் தேதிகளில் மேலப்பாளையம் மண்டலம் 40, 41, 42, மற்றும் 51 முதல் 55 வரையிலான வார்டு பகுதியில் குறைந்த அளவை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கை: நெல்லை மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு ஜெர்மனி, ஜப்பான் ஐக்கிய நாடுகளின் மருத்துவ துறை சார்ந்த பணியமர்த்துவதற்கான வெளிநாட்டு மொழி கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீசார் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டுமென நடத்துனர்கள் கூறி வருவதால் ஆங்காங்கே போலீசார் அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என வள்ளியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலா ரூ.500 இன்று அபராதம் விதித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அயலக தமிழர் நலவாரிய அடையாள அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இதற்கான அனைத்து வசதிகளும், விளக்கங்களும் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பதிவு செய்பவர்களுக்கு 3 மாதம் பதிவு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாலுமுக்கு பகுதியில் 10 செ.மீட்டரும், ஊத்து பகுதியில் 8 செ.மீட்டரும் கக்காச்சியில் 7 செ.மீட்டரும் பாபநாசம் பகுதியில் 5 செ.மீட்டர், மாஞ்சோலையில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் கோல்டா கிரெனா ராஜாத்தி நேற்று கூறுகையில், தொடக்கக் கல்வி 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 31ஆம் தேதி மாலை 5:45 மணி வரை scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் அல்லது நெல்லை மாவட்டம் முனஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 24) காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்குத் தேவையான பாட புத்தகங்களை சரியாக பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.