Tirunelveli

News July 18, 2024

வெற்றி: நெல்லை மாணவர்கள் அசத்தல்

image

மாவட்ட அளவில் நடைபெற்ற ‘அட்டையா பட்டயா’ விளையாட்டுப் போட்டியில், பேட்டையை அடுத்துள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியை ரோகிணி வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கு மாணவர்கள் சுதாகர், சூர்யா, இசை, கார்த்தி, சுரேஷ்குமார், தரணி, விஜய் ஆகியோர் தேர்வாகியதாக உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை தெரிவித்தார்.

News July 18, 2024

ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு எதிராக மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புருஸ்க்கு எதிராக, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது தொடர்ந்து 2ஆம் இடத்தில் இருந்த அவர், இறுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த வெற்றியை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

News July 18, 2024

நெல்லையில் தக்காளி விலை குறைந்தது

image

நெல்லையில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை ஏற்றத்தில் இருந்தது. இதனால், உழவர் சந்தையில் கிலோ ரூ.78க்கும், வெளிச் சந்தையில் ரூ.100 வரையும் விற்பனையானது. இந்த நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் இன்று விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. நெல்லை உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.8 குறைந்து 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.15 வரை கிலோவிற்கு குறைந்துள்ளது.

News July 18, 2024

அரசே எடுத்து நடத்த வேண்டும்: வழக்கறிஞர்

image

நெல்லை மாவட்டம் உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மீனவ சமுதாய மக்களை கடலோரப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, வேறு இடங்களுக்கு குடிபெயர வைப்பது எப்படி தவறானதோ, அதேபோல் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு பகுதிக்கு கொண்டு செல்வது முற்றிலும் தவறானது. இதனை அரசே எடுத்து நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News July 18, 2024

மேட்டுப்பாளையம் ரயிலை நிரந்தரமாக்க வலியுறுத்தல்

image

நெல்லையில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் செல்கிறது. மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு நெல்லை வருகிறது. 2 ஆண்டாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு உள்ளதால், இதை நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News July 18, 2024

நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்

image

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு அருணகிரி தியேட்டர் முதல் லட்சுமி மஹால் வரை, பாதாள சாக்கடை பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக, 20ஆம் தேதி முதல் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு, கோயில் வாசல், குளப்பிறை தெரு, வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிச் சாலை தச்சநல்லூர், ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

புதிய வகுப்பறை கட்டிடம்; இன்று முதல்வர் திறக்கிறார்

image

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு இந்த பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி இசா கடந்த ஆண்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார்.

News July 17, 2024

நெல்லை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து பேர் கலந்துகொண்டு காவல் ஆணையர் முனைவர் மூர்த்தியிடம் மனுக்களை அளித்தனர். இந்த புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழி வகை செய்யப்படும் என காவல் ஆணையர் பொதுமக்களிடம் கூறினார்.

error: Content is protected !!