India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நலிந்த பிரிவினருக்கான 25% இட ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர்வதற்கு இணைய வழியாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்று (மே 28) மாணவர் தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்ட, பள்ளிகளில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2632 மாணவர்களை குலுக்கல் நடத்தி தற்போது தேர்வு செய்கின்றனர். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் நேற்று (மே 27) அபராதம் விதித்துள்ளது. மூன்றடைப்பு முப்புடாதி என்பவர் நெல்லையிலிருந்து ஊருக்கு செல்லும்போது அரசு பேருந்து நடத்துநர் வள்ளியூர் டிக்கெட்டை வழங்கி பின் மூன்றடைப்பில் நிற்காமல் சென்றதால் தொடர்ந்த வழக்கில் நாகர்கோவில் அரசு பேருந்து கிளை மேலாளர், நடத்துநருக்கு ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 31 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக காலை 8 மணிக்குச் செல்லும் மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16340 ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் ஜூன் 1ம் தேதி சிஎஸ்டிஇல் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில் சிஎஸ்டி பூனே இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணி புரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. அங்கு மின்கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரத்தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இன்று way 2 நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு மின் கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரங்களை வெட்டி அகற்றினர். இந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்திய அரசு சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் மழை குறைந்ததை முன்னிட்டு வெயில் வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று (மே 27) காலை முதல் வெயில் வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நாளை (மே 28) அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக்ராஜாவின் உடல் இன்று (மே 27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பொன்னாக்குடி பாலத்தின் மீது நெல்லையில் இருந்து இன்று (மே 27) நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஸ்வரன் (22) ஆகிய இருவரும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.
திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி இன்று (மே 27) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திக் திக் மனநிலையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.