India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவிலும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை நாளை (மே 30) தொடங்குகிறது. நெல்லை தென்காசி மலையோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் பருவ மழை தொடங்கும் என திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் இன்று (மே 29) முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில், 895 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இந்தியாவின் 17ஆவது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். 1962இல் உருவாக்கப்பட்ட களக்காடு புலிகள் சரணாலயம் மற்றும் முண்டந்துறை புலிகள் சரணாலயம், இணைத்து 1988இல் இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக, இதற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்தது.
நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., சம்மன் அனுப்பியுள்ளது. எம் எல் ஏ நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதனால் பாஜக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 21ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனை அடுத்து நெல்லை டவுன் ரத வீதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயில் தேர்களை சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இன்று போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோவில்குளம் பகுதியை சேர்ந்தவர் சாலமோன் மகன் சந்திரன் (25). இவர் கடந்த 26ஆம் தேதி அன்று 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தெரிய வந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வனிதா போக்சோ சட்டத்தில் நேற்று வழக்கு பதிவு செய்து சந்திரனை தேடி வருகிறார்.
பழங்குடியினர் நலம் கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0462 2501076, 7338801275 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 28) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு வேனில் இன்று (மே 28) ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாளை பொன்னாக்குடி பகுதி அருகே எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் காரில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் இன்று (மே 28) நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையை முற்றுகையிட்டனர். விடைத்தாள் திருத்துவது மட்டுமே ஆசிரியர் பணி மதிப்பெண் பதிவேற்றம் செய்வது பல்கலைக்கழத்தின் பொறுப்பு எனக்கூறி இந்த முற்றுகையை நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.