Tirunelveli

News July 20, 2024

நெல்லையில் இன்று டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி

image

நெல்லையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. 3வது கட்ட இந்த லீக் ஆட்டங்கள் சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன. நெல்லையில் நடைபெறும் இப்போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

News July 20, 2024

நெல்லையில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று(ஜூலை 20) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்திலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 20, 2024

தமிழக பாஜக தலைவராகுமா நெல்லை எம்எல்ஏ

image

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று படிக்க அனுமதி அளிக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

News July 20, 2024

மாநில அளவிலான சதுரங்க‌ போட்டி

image

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு பள்ளியில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழ்நாடு மாநில அளவிலான ஒரு நாள் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். மொத்த பரிசு 75,000 என இன்று பள்ளி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு 97159-15279 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

News July 20, 2024

தணிக்கையாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

நெல்லையில் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு தணிக்கையாளர்கள் அல்லது நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் தணிக்கையாளர்கள் (அ) நிறுவனங்கள் விவரங்களுக்கு https://tirunelveli.nic.in என்ற தளத்தில் காணலாம் என்றும், வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நெல்லை முன்னாள் மேயர்

image

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் பி.எம் சரவணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். பின்னர் கட்சி பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம், முன்னாள் மேயர் சரவணன் ஆலோசனை பெற்றார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.

News July 20, 2024

காங்கிரஸ் விவசாய பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்

image

நெல்லை மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவராக மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை நியமனம் செய்தார். புதிய விவசாய பிரிவு மாவட்ட தலைவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இன்று (ஜூலை.19) வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News July 20, 2024

பணியிட மாற்றம் செல்லும் ஆணையருக்கு நினைவு பரிசு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு மாவட்டத்திற்கு வணிகவரித்துறை இணை இயக்குனராக மாறுதலாகி செல்வதை தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் தங்கபாண்டியன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் ஆணையருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

News July 20, 2024

தொடர் கண்காணிப்பில் 30 ரவுடிகள்

image

நெல்லை மாநகரில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் 466 ரவுடிகளில் மிக முக்கியமான 30 ரவுடிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் 64 பேர் கைதாகி அதில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க 178 நபர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

கலை பயிற்சி குறித்து ஆட்சியர் அறிக்கை

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. கலை பயிற்சி பெறுவதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 19) அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!