Tirunelveli

News June 2, 2024

நெல்லை -நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

image

தெற்கு ரயில்வே சார்பில் (ஜூன்.2) இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை 6:45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06070) மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06069) ஜூன் 6-ம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

கொளுத்தும் வெயில்: மீண்டும் மின் நுகர்வு அதிகரிப்பு

image

நெல்லை, பாளை வட்டாரங்களில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சுமார் 20 தினங்களுக்கு பின்னர் நேற்று (ஜூன் 1) வெப்ப பதிவு 100 டிகிரி தாண்டி 101.3 டிகிரி ஆக பதிவானது. இதனால் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இன்று (ஜூன்) 2 காலை முதல் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஏசி மின்விசிறி பயன்பாடு உயர்ந்து கடந்த 3 தினங்களாக மின் நுகர்வு மீண்டும் அதிகரித்துள்ளது.

News June 2, 2024

மீண்டும் சிறுத்தை? ரோந்து பணியில் வனத்துறையினர்

image

நெல்லை மாவட்டம் விகேபுரம் அடுத்த அனவன் குடியிருப்பு வேம்பையாபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்ற நிலையில் அங்கு 4 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிரிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று இரவு பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News June 1, 2024

ராதாபுரம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாமஸ் மண்டபம் என்னும் இடத்தில் சாலையில் சென்ற கார் இன்று (ஜூன் 1) கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் ஓட்டுனர் காயத்துடன் மீட்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

News June 1, 2024

ககன்யான் திட்டத்திற்கான 3ஆம் கட்ட சோதனை வெற்றி

image

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்துள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 3வது கட்டமாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு நேற்று (மே 31) சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

News June 1, 2024

திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சிறப்பு!

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கூந்தங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இதன் பரப்பளவு 1.2933 சகிமீ ஆகும். இப்பகுதி 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் சிறப்பானது.

News June 1, 2024

‘இ-சிகரெட்’ – நெல்லை சித்தா டாக்டர் எச்சரிக்கை

image

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று (மே 31) தொடங்கியது. அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்விழி கூறுகையில், 15 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு புகையிலை குறித்த தெளிவு வர வேண்டும். இ-சிகரெட் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இ-சிகரெட்டால் உடலுக்கு பாதிப்பு குறைவு என்பது போன்ற எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை என்றார்.

News June 1, 2024

நெல்லை: நலவாரிய அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல் நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுவதற்கு கடந்த 15ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்ய தொடங்கப்பட்டது. இதற்கான அனைத்து வசதிகளும் விளக்கங்களும் ஆணையரகத்தின் இணையதளத்தில் https://nrtamils.tn.gov.in ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

News June 1, 2024

நெல்லை: ஐஜியுடன் நேரில் சந்திப்பு

image

பணி நிறைவு பெற்ற தமிழக உளவுத்துறை ஐஜி கண்ணப்பன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (மே 31) நெல்லைக்கு வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்தனர். பின்னர் ஐஜி கண்ணப்பன் உடன் பல்வேறு ஆலோசனைகளை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிகழ்வின்போது மாநகர பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 31, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இன்று (மே 31) நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர காவல் துணை ஆணையாளர் ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!