India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 34 மதுக்கடைகளை நாளை(23.7.24) அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இப்பகுதியில் இருக்கும் மதுக்கடைகளை மூட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ராக்கெட் ராஜாவின் காரில் சென்ற திசையன்விளை உதவி காவல் ஆய்வாளர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி நீதிமன்றத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக சென்ற ராக்கெட் ராஜாவின் காரில் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜூலை 22) உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள காரையார், சேர்வலாறு, அகஸ்தியர் அருவி பகுதிகளுக்கும் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி பகுதிகளுக்கும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாளையில் இன்று (ஜூலை 22 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதற்கான அறிவிப்புகளை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம் நாளை ((ஜூலை 23) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வருகை தருகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வருகை தரும்படி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பதிவு குறைந்துள்ளது. இன்று (ஜூலை 22) காலை 7 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 31 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 72 அடியாக உள்ளது. அதேபோல் பாபநாசம் அணை நீர்வரத்து 843 அடியாக உள்ளது. வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 117 அடி நீர் இருப்பு உள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த பத்தமடை கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் 189 பேருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. தற்போது வரை அந்த இடத்தினை அளவீடு செய்யாமல் பயனாளிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்த இடத்தினை விரைவில் அளவீடு செய்து பயனாளிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் நாளை முதல் ஜுலை.31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று, நாளை, 25, 29, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக எழுப்பூருக்கு சென்றடையும். இதேபோல், பல்வேறு ரயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.