India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலியில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் படி 8220 வாக்குகள் பெற்று இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலியில் பெரும் தோல்வியை அதிமுக சந்திக்கும் என கருதப்படுகின்றது.
நெல்லையில் ஒட்டுமொத்தமாக முதல் சுற்றில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் 21,119 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் 16,390 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 3671 வாக்குகளும், நாம் தமிழர்- 4485 வாக்குகளும் பெற்றுள்ளன. நெல்லையில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது.
நெல்லை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3216 வாக்குகள், அதிமுகவை சேர்ந்த ஜான்சி ராணி 1071 வாக்குகள், பாரதிய ஜனதாவை சேர்ந்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2749,வாக்குகள் நாம் தமிழர் 1003 வாக்குகள் முதல் சுற்றில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி முன்னிலை பெற்றுவருகிறார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு என்னும் படி அரசு பொறியியல் கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3817 வாக்குகள். அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 522, பாரதிய ஜனதா வேட்பாளர் நயனார் நாகேந்திரன் 2157, நாம் தமிழர் 774 வாக்குகள் பெற்றுள்ளன.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளனர்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக நயினார் நரேந்திரன் முதல் சுற்றில் பின்னடைவில் உள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று பாஜக நயினார் நாகேந்திரன் 2903,
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 397 வாக்குகளும், நாம் தமிழர் 479 பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தபால் வாக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்த நிலையில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகின்றார்.
நெல்லை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். 2ஆம் இடத்தில் திமுக உள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 2ஆம் சுற்று இன்னும் சில நேரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.