India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். இந்த மூன்று மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய அரசு மற்றும் ரஷ்ய நாட்டின் கூட்டு முயற்சியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 6 பேர் ஆவணப்படம் எடுப்பதாக திரிந்துள்ளனர். தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார், ரஷ்யாவை சேர்ந்த 6 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரிடமும் விசாரித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி பாஜக அரசை கண்டித்து, நேற்று (ஜூலை 23) இரவு நெல்லை மாநகர திமுக சார்பில் டவுன் பகுதியில் பட்ஜெட் நகல்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என பல்வேறு தரப்பினரும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாநகரில் 11 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி நேற்று(ஜூலை 23) உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வாளர் பாஸ்கரன் பேட்டை காவல் நிலையத்திற்கும், பேட்டை காவல் நிலையம் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் டவுன் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 26ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதன் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளராக மதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிக்கையை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் சக நிர்வாகிகள் புதிய அமைப்பாளருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 117.50 அடி உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 70.60 அடியாக மட்டுமே இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு 80.87 அடியாக இருந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு 44.5 அடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை அருகில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி கலந்து கொள்ள உள்ளதாக நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.