India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூலை 25) காலை 7 மணி வரை மாவட்டத்தில் 38 மில்லி மீட்டர் மழை பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 14 மில்லிமீட்டர் மழையும் ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும் காக்காச்சி, மாஞ்சோலை பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தாழையூத்து உத்தமபாண்டியன்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(23), களக்காடு கீழதேவநல்லூரை சேர்ந்த முப்பிடாதி (23) ராமையன்பட்டியை சேர்ந்த சரவணன் (26), சிவந்திபட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த ஜீவாராம் சவுந்தர்(24), ஏசுராஜா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் சிங்கம்பத்தில் உள்ளது. இங்கு சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் அங்குள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மரம் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் – நெல்லை இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெல்லை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரித்திக்-சோனுவின் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தும், 4 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபர்மேஷன் நிறுவனம் சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு 200 காலி பணியிடங்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரி வரை, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கல்வி சான்று ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் கைது செய்யப்பட்ட ரவுடி வீரமணிக்கும் சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ரவுடி பட்டியலில் இருக்கும் வீரமணி சொந்த ஊரில் வைத்து வேறொரு வழக்கு சம்பந்தமாக கைது என கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று(ஜூலை 24) 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நேற்று(ஜூலை 23) காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் காலிப்பணியிடங்களுக்கு இட மாறுதலாகி செல்ல 46 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரும்பிய இடத்திற்கான டிரான்ஸ்பர் உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து இன்று(ஜூலை 24) வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
சட்டம் ஒழுங்கு குறைபாடு, ரேசன் கடையில் பாமாயில் பருப்பு சீராக வழங்காதது, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் இன்று(ஜூலை 24) அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் பேசினர். ஏராளமான தொண்டர்கள் கட்சி கொடிகள் மற்றும் கண்டன பதாதைகளுடன் பங்கேற்றனர்.
திசையன்விளை அருகே உள்ள கீரைகாரன்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திசன்(49). இவர் நேற்று(ஜூலை 23) திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது, வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுட்டதில் வயிற்றில் ஏர்கன் குண்டு பாய்ந்ததாக கூறி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தகவலறிந்த போலீசார் அதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.