India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையர் சுகபுத்திரா இன்று(ஜூலை 25) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; “அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுவேன். தாமிரபரணி தூய்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், பாதாள சாக்கடை தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சி வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வு பணிகளுக்காக இன்று தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வருகை தந்தார். அவரை நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து மானூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சரிடம் ஒன்றிய பெருந்தலைவர் பல்வேறு ஆலோசனைகளை பெற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அழகான தமிழ் கையெழுத்துப் போட்டிகள் பாளையங்கோட்டை சாரார் தக்கர் பள்ளி அரங்கில் இன்று(ஜூலை 25) நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இரு பிரிவுகளும் முதல் மூன்று இடம் வருபவர்களுக்கு பரிசு அளிக்க நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 5ஆம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் 29 ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நான்காம் திருவிழாவான ஆகஸ்ட் 1 ஆம் தேதி பகல் 11 மணிக்கு அண்ணை காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் ரத வீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக மாற்றிட தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. எனவே இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://agriinfra.dac.gov.in என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூலை 25) காலை 7 மணி வரை மாவட்டத்தில் 38 மில்லி மீட்டர் மழை பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 14 மில்லிமீட்டர் மழையும் ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும் காக்காச்சி, மாஞ்சோலை பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தாழையூத்து உத்தமபாண்டியன்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(23), களக்காடு கீழதேவநல்லூரை சேர்ந்த முப்பிடாதி (23) ராமையன்பட்டியை சேர்ந்த சரவணன் (26), சிவந்திபட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த ஜீவாராம் சவுந்தர்(24), ஏசுராஜா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் சிங்கம்பத்தில் உள்ளது. இங்கு சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் அங்குள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மரம் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.