India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதிமுக சார்பில் திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துறை வைகோ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கே எம் எ நிஜாம் நேற்று( ஜூன் 5) மாலை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 6) நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், இன்று காலை வரை பாளையங்கோட்டையில் 5, நெல்லையில் 5.60, நாலு முக்கு பகுதியில் 10, ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளது என்றும் மேலும், மாவட்டம் முழுவதும் 32.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 420க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ, பிடெக் போன்ற இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜூன் 6) நிறைவு பெறுகிறது. விண்ணப்பிக்காதவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் இன்று (ஜூன் 6) தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை முதலே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று மாலை பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனை அடுத்து திருநெல்வேலியில் 5.6 மில்லிமீட்டர் மழை பதிவும்,பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று காலை நெல்லை மாவட்ட நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 8ம் தேதி பாளையங்கோட்டை தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதை கண்டித்து, தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பொதுச்செயலாளர் அய்கோ இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூன்5) பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்பகுதியில் உள்ள கூடங்குளம் உள்ளிட்ட சில இடங்களில் இன்று மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகிள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வரும் நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். அவர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 90,019 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும்.
திருநெல்வேலி மாவட்டம், கருப்பன்துறையில் நம்ம ஊரு நந்தவன திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டது. கருப்பன் துறை அழியாபதீஸ்வரர் கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 5) மரக்கன்றுகளை நட்டாா். அப்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இன்று (ஜூன் 5) வாழ்த்து பெற்றார். இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.