Tirunelveli

News June 7, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 7.6.2024 (இரவு7 மணி வரை) திருநெல்வேலி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News June 7, 2024

அமைச்சரை சந்தித்த நெல்லை திமுக செயலாளர்

image

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் பொறுப்பு அமைச்சரும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனை இன்று(ஜூன் 7) திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

News June 7, 2024

நெல்லையில் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

image

நெல்லை மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையானது மாவட்ட நிர்வாகம் சார்பாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் பணிபுரிய ஓட்டுனர், ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை(ஜூன் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் அசல் கல்வி சான்றிதழ் மற்றும்  ஓட்டுனர் உரிமம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 7, 2024

தேர்தல் விதிமுறை நிறைவு: மனு பெட்டி அகற்றம்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த மனு பெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக சந்தித்து மனுநீதி நாளில் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

News June 7, 2024

தேரோட்டம்: நெல்லைக்கு உள்ளூர் விடுமுறை

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வு ஏதும் இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறை செல்லாது. இதற்கு பதிலாக 29ஆம் தேதி உள்ளூர் வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

நெல்லை: சாலையில் வைத்து வெட்டு… பாஜக கண்டனம்

image

பாஜக நெல்லை மாவட்ட துணைத் தலைவர் முருகதாஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு நேற்று (ஜூன் 6) அளித்தார். அந்த மனுவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவமதிக்கும் நோக்கத்தில் ஆட்டின் கழுத்தில் அவரது பெயரை எழுதி வைத்து அதனை சாலையின் நடுவில் பலியிடுகிறார்கள்; இது கண்டிக்கத்தக்க செயல். இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

News June 7, 2024

தமிழ் வழி கல்வி படித்த மாணவி நீட் தேர்வில் சாதனை

image

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் ராக்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செண்டு. இவருடைய மகள் சரஸ்வதி. இந்த மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே அரசு பள்ளியில் கல்வி கற்றுள்ளார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

News June 7, 2024

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

image

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

டெபாசிட் இழந்த நெல்லை வேட்பாளர் இபிஎஸ் உடன் சந்திப்பு

image

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்சி ராணி டெபாசிட் இழந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 6) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது டெபாசிட் இழக்கும் அளவிற்கு நெல்லையில் நடந்தது என்ன? என்பது குறித்து வேட்பாளர் விரிவாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

News June 7, 2024

மாஞ்சோலை பிரச்சனை: கலெக்டரை சந்திக்க முடிவு

image

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் இன்று (ஜூன் 7) மாலை 3 மணிக்கு கலெக்டரை சந்திக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நாளை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்கின்றனர்.

error: Content is protected !!