India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எட்வின் ராஜா( 35), வேலு (61). இவர்கள் இருவரையும் திருட்டு வழக்கில் திசையன்விளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்ற தொடர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த அவர்களை திசையன்விளை போலீசார் இன்று (ஜூன் 8 ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை விவகாரத்தில் எஸ்டேட் பணியில் இருந்து வெளியேற விரும்பும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் பட்டா வீடுகளும் வழங்கிட உரிய உதவிகள் செய்திட ஏற்கனவே அரசின் அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு பரிசீலனை செய்து அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று உறுதி அளித்தார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 8)விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 20 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு மாணவர்கள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 8) விடுத்துள்ள அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் “கலைஞர் கனவு இல்லம்” என்ற திட்டம் அரசால் வெளியிடப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படுகிறது. மறு கணக்கெடுப்பு, புதிய குடிசை கணக்கெடுப்பு, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் இன்று (ஜூன் 8) குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற கூடாது என்பதற்காகவே இந்த சோதனைகள் நடைபெறுவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று (ஜூன் 7) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைகழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கை நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(ஜூன் 7) முதல் விசாரணைக்கு துணையாக தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி போலீசார் ஜெயா பிரின்சஸ் தலைமையிலும், குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலும் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அணியான எஸ்டிபியூ நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக இன்று வண்ணாரப்பேட்டை டிப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை, தென்காசி, குமரியில் மாவட்டங்களில் இன்று(ஜூன் 8) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், கடந்த முறை போல் இந்த முறையும் தமிழகத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கட்சி வளர முக்கிய நபர்களில் ஒருவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜக கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.