Tirunelveli

News July 31, 2024

சலவையகம் அமைக்க மானியம் – கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (ஜூலை 30) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பத்து நபர் கொண்ட குழுவாக செயல்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

சொரிமுத்தையனார் கோயில் வளாகத்தில் தங்க அனுமதி

image

காரையாறு சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சொரிமுத்தையனார் திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்கிக்கொள்ளலாம் என காவல்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News July 30, 2024

தற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கான வாய்ப்பு

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கு யு. ஜி. சி. விதிகளின்படி தேர்வு நடைபெற உள்ளது. 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தரவுத்தாளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் சாக்கரட்டீஸ் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 30) வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News July 30, 2024

மாஞ்சோலையை எடுத்து நடத்த இயலாது – டேன் டீ

image

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு தேயிலை தோட்டம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் சார்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த இயலாது என பதில் அளித்துள்ளது.

News July 30, 2024

பாதுகாப்பு பணியில் 620 போலீசார் – டிஎஸ்பி தகவல்

image

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இது தொடர்பாக அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் நேற்று கூறுகையில்; ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 20 இன்ஸ்பெக்டர், 54 எஸ்ஜகள் உட்பட 620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

News July 30, 2024

நெல்லையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்திலும் இன்று(ஜூலை 30) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் போகும்போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துட்டு போங்க மக்களே!

News July 30, 2024

நெல்லையில் பல சுற்றுலா தலங்கள் மூடல்

image

அம்பை அருகே காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகிற 31.07.2024 முதல் 08.08.2024 வரை பாபநாசம் அகஸ்தியர் சூழல் சுற்றுலா அருவி, முண்டந்துறையில் vehicle safari, மணிமுத்தாறு சூழல் சுற்றுலா அருவி மற்றும் மாஞ்சோலை சூழல் சுற்றுலா பகுதிகள் மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துறை இயக்குநர் இளையராஜா நேற்று(ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

வீரவநல்லூரில் முன்னோடி முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஆக.1ம் தேதி வடக்கு வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ‘முன்னோடி முகாம்’ நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 30, 2024

வீரவநல்லூரில் முன்னோடி முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் வருகிற ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வருகிற ஆக.1ம் தேதி வடக்கு வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்னோடி முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!