Tirunelveli

News June 10, 2024

பயணிகள் ரயில்களுக்கு நிரந்தர எண் அறிவிப்பு

image

செங்கோட்டையிலிருந்து அம்பை வழியாக திருநெல்வேலி செல்லும் ரயில்கள் எண் 06658, 06682, 06684, 06686, திருநெல்வேலியிலிருந்து அம்பை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில்கள் எண் 06681,06683,06685,06687 நிரந்தரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த எண்கள் நிரந்தர எண்களாக அமலுக்கு வருவதாக இன்று (ஜூன். 10)தென்னக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News June 10, 2024

மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் இன்று (ஜூன் 10) அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீனவர்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

திருநெல்வேலிக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்கடல் என்பது கடல் சீற்றம் எதுவும் இன்றி திடீரென அதிக உயரத்தில் அலைகள் எழும் நிகழ்வு என கருதப்படுகின்றது. இந்த கள்ளக்கடல் எச்சரிக்கையை இந்திய கடல்சார் தகவல் மையம் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

News June 10, 2024

நெல்லைக்கு வந்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர்

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி இன்று (ஜூன் 10) நெல்லைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையாளர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

News June 10, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

image

சுமார் 40 தினங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலகிக் கொள்ளப்பட்டதால் இன்று (ஜூன் 10) மீண்டும் மக்கள் குறை இருக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து காலை 9 மணி முதல் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பலத்த பரிசோதனைக்கு பின்னர் மனு அளிக்க அனுமதித்தனர்.

News June 10, 2024

ஆயுத பூஜைக்கு முன்பதிவு நாளை தொடக்கம்

image

தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ஆம் தேதி, விஜயதசமி 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இதற்காக அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் 9ம் தேதி ஊருக்கு புறப்பட்டு செல்வோர் நாளை 11 ம் தேதி முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். பத்தாம் தேதி வியாழன் அன்று செல்பவர்கள் வரும் 12ஆம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என நேற்று ரயில்வே அறிவித்துள்ளது.

News June 10, 2024

50 நாட்களுக்கு பின் காலை உணவை ருசித்த மாணவர்கள்

image

நெல்லை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு முன் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. 50 நாட்களுக்கு பின் பள்ளிகள் இன்று திறக்க பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். தச்சநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை வருகை தந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் அதை உற்சாகத்துடன் ருசித்து சாப்பிட்டனர்.

News June 10, 2024

பள்ளி திறப்பு: காலையிலேயே கடும் ட்ராபிக்

image

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (ஜூன் 10) காலை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக காலை 7 மணி முதலே கிராமப் பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் மற்றும் பள்ளி வாகனங்களில் வந்து குவிய தொடங்கினர். இதனால் காலை 7.30 மணிமுதல் பாளையங்கோட்டை பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

News June 10, 2024

நெல்லை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

நெல்லை மாவட்டம் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று (ஜூன் 9) மாலை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக மோடி இன்று பதவி ஏற்றதைத் தொடர்ந்து பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதில் அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News June 9, 2024

பேருந்து நிலையத்தில் கூடிய பெருங்கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் இருந்து கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கப்படுவதால் ஏராளமானோர் இன்று (ஜூன் 9) வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையொட்டி திருநெல்வேலியிலிருந்து சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். மேலும் சென்னை செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

error: Content is protected !!