Tirunelveli

News June 11, 2024

நெல்லையில் தடை: மாநகராட்சி ஆணையர் அதிரடி

image

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் இன்று (ஜூன் 11) விடுத்துள்ள அறிக்கையில்: நெல்லை மாநகராட்சி எல்லை பகுதியில் எந்த இடத்திலும் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகள் மற்றும் பேனர்கள் போன்றவை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அடுத்த 7 தினங்களுக்குள் அகற்ற வேண்டும். தொடர்ந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News June 11, 2024

சோனியா காந்தியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றார். அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News June 11, 2024

நெல்லை மாணவர்களை சந்திக்கும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்க உள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் வைத்து நடிகர் விஜய் சந்தித்து பாராட்ட உள்ளார். இதற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News June 11, 2024

மாஞ்சோலை விவகாரம்: சபாநாயகர் அதிரடி

image

ஜூன் 14-ம் தேதி முதல் மாஞ்சோலையில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் தடை செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2028-ம் ஆண்டு வரை உரிமம் இருப்பதால் மாஞ்சோலையில் குடிநீர், மின் இணைப்பு தடை செய்யப்படாது என உறுதி அளித்தார்.

News June 11, 2024

நெல்லை: தோட்ட தொழிலாளர்கள் சபாநாயகரிடத்தில் மனு

image

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் சபாநாயகர் அப்பாவுவை இன்று (ஜூன் 11) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தொடர்ந்து அந்த பகுதியிலேயே குடியிருக்க ஏதுவாக எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

News June 11, 2024

நெல்லை: வாகன ஓட்டிகளால் நோயாளிகள் அவதி

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதிகளவு கொண்டு வந்து விடுவதால் பேருந்தில் வரக்கூடிய நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 11, 2024

குற்றாலம்: சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

image

குற்றாலம் பிரதான அருவியல் இன்று (ஜூன் 11) தண்ணீர் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே காணப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 11, 2024

நெல்லை எம்.பி.யின் நாளைய நிகழ்ச்சி நிரல் 

image

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ருஸ் நாளை 12ம் தேதி காலை 6.10 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக நெல்லை வருகிறார்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லமான 40, NGO நியூ காலனி (RTO OFFICE அருகில் ) ஜவஹர் நகரில்
இருந்து
10 மணியளவில் மூத்த காங்கிரஸ் தலைவர் மூலைக்கரைப்பட்டி லெனின் பாரதி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

News June 11, 2024

மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த சபாநாயகரிடம் மனு

image

தமிழகத்தில் ஊட்டி, ஏலகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்துவதுபோல மாஞ்சோலை பகுதியையும் அரசே எடுத்து நடத்தி எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மாஞ்சோலை பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சபாநாயகர் அப்பாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் தமிழக அரசிடம் பேசுவதாக உறுதியளித்தார்.

News June 11, 2024

நெல்லை: இங்கு வருஷத்துக்கு 225 நாள் மழை

image

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மாஞ்சோலை பகுதி உள்ளன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் இந்தியாவிலேயே ஆண்டிற்கு 225 நாட்கள் மழை பொழியும் இடமாக மாஞ்சோலை உள்ளதாக இன்று தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!