India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடை தெருக்களில், கூட்ட நெரிசல்களில் செல்லும்பொழுது பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கூட்டம் மிகுந்த பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி நெல்லை மாவட்ட காவல்துறை இன்று (அக்.24) கேட்டுக் கொண்டது.

தமிழக முழுவதும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருந்தது. அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி என்பதால் மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.24) தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை(அக்.,25) இரவு நெல்லை வருகிறார். நாளை மறுதினம் காலை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாநகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இன்று(அக்டோபர் 24) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 63 மில்லி மீட்டர், அதாவது 6.3 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதா புரத்தில் 37 மில்லி மீட்டர், மாஞ்சோலை 2 மில்லி மீட்டர், நாலு முக்கில் 6 மில்லி மீட்டர், ஊத்தி 5 மில்லி மீட்டர், சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் அம்பையில் 2.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘டானா’ புயல் எதிரொலியாக நெல்லையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்று காலை நெல்லையிலிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியாவிற்கு செல்லும் நெல்லை – புருலியா எக்ஸ்பிரஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதுபோல் இன்று(அக்.,24) நெல்லையிலிருந்து ஷாலிமார் செல்லும் AC எக்ஸ்பிரஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இன்று இரவு காவல் துணை கண்காணிப்பாளர் பொன் ரகு தலைமையிலான காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் அருகே சாலையில் சென்ற மாடு, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதி பலத்த காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் சுற்று பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், இன்று(அக்.,23) இரு மார்க்கத்திலும் வள்ளியூர் – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. அந்த ரயில் வள்ளியூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு செல்லும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே எழும்பூர், செங்கல்பட்டு, நெல்லை வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்.,29 மற்றும் நவ.,5ம் தேதிகளில் இரவு 11.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06001) மறுநாள் பகல் 12.15-க்கு கன்னியாகுமரியை சேரும். இந்த ரயிலுக்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நாளிதழான இந்து தமிழ் குழுமம் மற்றும் இந்தியன் வங்கி சார்பாக மாணவர்களுக்கான ஆன்லைன் குவிஸ் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://www.htamil.org/IBQUIZ இதற்கு பதிவு செய்வதற்கு மேலே உள்ள லிங்க் மூலம் மாணவர்கள் 27.10.24 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9940268686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.