India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சுப்பையா விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சுப்பையா உடல் சொந்த ஊரான வி.கே.புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், எஸ்பி சிலம்பரசன் இருவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நெல்லையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி காடுகளை அமைக்கும் முயற்சியில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் மாங்குரோவ் கன்றுகளை நட்டு காலநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தும் நெல்லை கலெக்டரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(அக்.,25) பகல் முழுவதும் அவ்வபோது மிதமான மழை பெய்தது. குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து இன்றும்(அக்.,26) நெல்லையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் கலெக்டர் கார்த்திகேயன் தடை விதித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழக அரசு பள்ளிக் கல்வி துறையின் சார்பாக நடைபெறக்கூடிய வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வரும் அக்.29 மற்றும் நவ.5 ஆகிய தினங்களில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாத நிலை உள்ளது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம் என தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு நெல்லையில் நேற்று (அக்.25) தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அழகநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (அக்.26) காலை 9 மணி அளவில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். எம்பி ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகிக்கிறார். ஏற்பாடுகளை வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் செய்து வருகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் நடைபெற்ற போட்டியில் 14 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மாநில அளவில் ஏழாவது இடத்தினை பிடித்துள்ளது. ஏழாவது இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (அக்.26) கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று வாழ்வியலை சொல்லும் விதமாக தமிழர் மரபையும், சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வியல் முறைகளையும் ஒருங்கிணைத்து படைக்கப்பட்டுள்ள ஹபீபி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.