Tirunelveli

News June 20, 2024

நெல்லை மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

image

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவர் மகாராஜா, போலி ‘WiFi’ மோசடியை தடுக்கும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மொபைலில் வரும் சந்தேகப்படும் இணைப்புகளை கிளிக் செய்வதையும், அறிமுகம் இல்லாத நெட்வொர்க்கில் உள்ளே நுழைவதை தவிர்க்கவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்றார். இவரை கல்லூரி நிர்வாகம் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

News June 19, 2024

நெல்லை: ஆபத்தான வகையில் பைக் சாகசம்

image

வள்ளியூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாதிய உணர்வை தூண்டும் வகையிலும் அதனை சமூக வலைதளங்களில் கெத்தாக பதிவிட்டும் வருகின்றனர். பைக் வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News June 19, 2024

“இரத்தம், வியர்வை சிந்தி உருவாக்கப்பட்டது மாஞ்சோலை”

image

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மட்டுமே தீர்வல்ல, அவர்களை வெளியேற்றவே கூடாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 6 தலைமுறையாக இரத்தம், வியர்வை சிந்தி உருவாக்கப்பட்டது மாஞ்சோலை எஸ்டேட்; நீதிமன்றத்தின் தற்காலிக தீர்ப்பை ஏற்கிறேன்; மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளார்.

News June 19, 2024

“சட்டமன்ற குழு அமைத்து தேவையை அறிய வேண்டும்”

image

சட்டமன்ற குழு அமைத்து மாஞ்சோலை மக்களின் தேவையை அறிய முற்பட வேண்டும் என மாஞ்சோலை தொழிலாளர் தரப்பை சேர்ந்த ஜிப்சன் தெரிவித்துள்ளார். தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்த்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 19, 2024

மாஞ்சோலை மக்களை வெளியேற்றக்கூடாது – நீதிமன்றம்

image

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும்வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலையில் குத்தகை முடியும் நிலையில், 4 தலைமுறையாக வாழ்ந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டதை தொடர்ந்து, மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை குடும்பத்திற்கு ரூ.1,000 வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News June 19, 2024

நெல்லை: துணைத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 6 அன்று வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும். இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளதாவது, +2 துணைத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று(ஜூன் 19) வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் இன்று(ஜூன் 19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார்

News June 19, 2024

முடிவுக்கு வரும் மாஞ்சோலை சகாப்தம்!

image

நெல்லை, அம்பை அருகே 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான இவ்விடம் 1948-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அரசிடம் சென்றது. அன்றைய காலத்தில் இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததால் 2028 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது குத்தகை முடிவதால் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை குறித்த உங்கள் அனுபவம் என்ன?

News June 19, 2024

கோடகன், திலி., பாளையங் கால்வாயில் தண்ணீர் திறப்பு

image

நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு அணையில் இருந்து தமிழக அரசு உத்தரவுப்படி இன்று(ஜூன் 19) கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் தாமிரபரணி பாசனத்தில் உள்ள கோடகன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், பாளையங் கால்வாய் ஆகிய 3 கால்வாயில் கீழ் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இன்று காலை விநாடிக்கு 680 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

News June 19, 2024

நெல்லை: திமுக மாணவர் அணி பொறுப்புகளுக்கு நேர்காணல்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நாளை(ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு நேற்று(ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 18, 2024

நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்படுகிறது. இம்முகாம் வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்யவேண்டும் என தொழில்நெறி வழிகாட்டும் சார்பில் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!