India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை 6-ஆம் தேதி மாலை 3 மணி வரை மட்டுமே தனியார் வாகனங்கள் பாபநாசம் வனசோதனை சாவடியை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவில் பகுதியில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதால் பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்று திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு மேயராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து அவரை எதிர்த்து போட்டியிட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் மீண்டும் உட்கட்சி விவாகரம் ஏற்பட்டுள்ளதால் அமைச்சர் கே.என் நேரு மற்றும் தங்கம் தென்னரசிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நெல்லை மாநகர மாவட்ட செயலாளராக நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் நெல்லையின் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளதால் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமை கூறியும் 23 பேர் திமுக வேட்பாளருக்கு ஆதரவு மறுத்துள்ளனர். வெறும் 7 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நெல்லை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று ஆகஸ்ட் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவும் நபர்களை ஊக்குவிக்க இந்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ரூ.5000ம் பரிசு வழங்குகிறது. இதை ஊக்குவிக்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் நிதியில், கூடுதலாக 5,000 சேர்த்து வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்திய தபால் துறையானது வள்ளியூரைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான சுப்பையா நல்லமுத்துவை சிறப்பிக்கும் விதமாக அவரது நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டது. வனவிலங்கு புகைப்பட கலைஞரை கவுரவிக்கும் இந்தியாவின் முதல் தபால் தலை இதுவாகும். மேலும் இவர் ஒளிப்பதிவாளராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மங்கள்யான் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன் என்பவரின் உடன்பிறந்தவர் ஆவார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் வீட்டை வாடகைக்கு கொடுக்கும் போது அந்த வீட்டில் அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 02.08.2024 அன்று 5704 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5512 MW ஐ (24.07.2024) விட அதிகம். மேலும், நேற்று மட்டும் 40.9 MU மின்சாரம் மின் வலையமைப்பில் உறிஞ்சப்பட்டது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு பெரிய மைல்கல் ஆகும்” என கூறப்பட்டுள்ளது
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பவுல்ராஜ் மற்றும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயராக கிட்டு (எ) ராமகிருஷணன் தேர்வாகியுள்ளார். கிட்டு (எ) ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்றார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவுல்ராஜ் மற்றும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியிடுகின்றனர். பரபரப்பாக பேசப்பட்டு வந்த நெல்லை மேயர் விவகாரம் இத்தேர்தலின் மூலம் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.