India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகராட்சியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற மேயர் மறைமுக தேர்தலில் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய மேயராக பொறுப்பேற்க உள்ள ராமகிருஷ்ணன் சென்னை சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், இன்று (ஆக.07) சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் தனது வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கானது இன்று (ஆக.07) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கானது மீண்டும் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது என திருநெல்வேலியை சேர்ந்த வன ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புகாரில் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கோட்டை – புனலூர் இடையே 100 சதவீத மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து மின்சார எஞ்சின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் நெல்லை – தென்காசி கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேர நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு – கேரளா இடையே வணிக போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று(ஆக.07) காலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 118.25 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.24 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 127.03 அடியாகவும் உள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேட்ச்சைக்கு வாக்களித்த திமுகவை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் குறித்து பட்டியல் தயாரித்து தலைமைக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரை மறைவில் உள்ளடி வேலை பார்த்த திமுகவினர் மீது விரைவில் அது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருநெல்வேலி திமுகவில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியில் சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு மீதான GST-யை திரும்பப் பெறக்கோரி, நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாருக்கு வெளியே நேற்று நடந்த, இந்திய கூட்டணி போராட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவரோடு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றார்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருகிற 13ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அன்றைய தினம் தென்காசி செங்கோட்டை இடையே ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06685 நெல்லை – செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும். அதேபோல் வண்டி எண் 66684 செங்கோட்டை – நெல்லை ரயில் தென்காசியில் இருந்து கிளம்பும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைப்பு நடத்தும் மாநாடு அமெரிக்காவில் கென்னடக்கி மாநகரத்தில் நாளை 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் உலகத் தலைவர்கள், அமெரிக்க தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.