Tirunelveli

News June 25, 2024

நெல்லை – கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

image

நெல்லை-கொல்லம் இடையே மீட்டர்கேஜ் பாதை இருந்தபோது காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அகல பாதையாக மாற்றப்பட்ட பின் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, கொல்லம் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 25, 2024

மாஞ்சோலை விவகாரம்: அமைச்சர் விளக்கம்

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாததின்போது மாஞ்சோலை குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

News June 25, 2024

ஜூன் 28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 2 ஆம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து மதியம் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஜூன் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 25, 2024

நெல்லை கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: முதல்வர் விளக்கம்

image

நெல்லையில் மார்க். கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக கட்சி அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதுபோன்ற பிற்போக்குத்தனமான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

News June 25, 2024

நெல்லையப்பருக்கு அசதி போக்க வேள்வி

image

நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயிலில் கடந்த 13 ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி 10 நாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா நிறைவு பெற்றதை அடுத்து நேற்று(ஜூன் 24) சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஏற்பட்டுள்ள அசதியைப் போக்கும் சிறப்பு கலச வேலி பூஜை நடந்தது. 108 கலசங்கள் வைத்து வேள்வி நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

News June 25, 2024

நெல்லை மருத்துவமனைக்கு 10 டயாலிசிஸ் கருவிகள்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக 10 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரோடு சங்க உதவியுடன் வழங்கப்பட்டுள்ள இந்த டயாலிசிஸ் கருவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன் 25) கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

நெல்லை: உபரி ஆசிரியர் பணி நிரவல் நெறிமுறை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள் பணி நிறைவு மேற்கொள்வதற்கான நெறிமுறைகளை மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. முதலில் வட்டார அளவிலும் காலிப்பணியிடம் இல்லை என்றால், மாவட்டத்திற்குள் பணிநிரவல் செய்யப்படும். ஆன்லைன் மூலம் எமிஸ் இணையதளத்தில் பணி நிறைவு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

நெல்லை: திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

image

திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் ஆகியவற்றிற்கு சிறப்பு முகாம் வருகின்ற 27ம் தேதி மாவட்ட ஆட்சி தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் அறையில் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் கார்த்தியின் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

நெல்லையில் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா இன்று (ஜூன் 24) விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்ட கேஸ் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை(25ம் தேதி) பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும். கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.

News June 24, 2024

கள்ளச்சாராய விவகாரம்: இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று(ஜூன் 24) வெளியான அறிக்கையில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் 99941-73313 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!