India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று (ஆகஸ்ட் 9) காலை நிலவரப்படி 117.25 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.96 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 123.78 அடியாகவும் உள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட அளவில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக குறைதீர் கூட்டம் வரும் பத்தாம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை கைபேசி எண் பதிவு, போன்ற சேவைகளை இந்த நாளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியை உள்ளடக்கிய திருநெல்வேலி சரக டிஐஜியாக தற்போதைய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் மூர்த்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் வருகின்ற 11ஆம் தேதி பதவியேற்கிறார். திருநெல்வேலி புதிய காவல் ஆணையாளராக ரூபேஷ் குமார் மீனாவும் வருகின்ற 11ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் (எண் 16128) நாளை 10ம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில், நெல்லை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நேற்றும், இன்றும் கோவில் வளாக பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு வனத்துறை சார்பில் அனுமதிக்கப்படுவதாக இன்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் எதிரிகளை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 8) எஸ்பி அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. எஸ்பி சிலம்பரசன் பாராட்டு சான்று வழங்கி அவர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த யூனுஸ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிர் நட்டு பராமரித்து வருகிறார். அதில் ஒரு வாழைமரம் இரண்டு அடி வளர்ந்த நிலையில் குலை தள்ளியது. இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது அந்த மரத்தை விவசாயி யூனுஸ் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.