India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை ஆகஸ்ட் 11 மாலை 5 மணிக்கு ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை முன்னிட்டு நால்வர் சன்னதியில் முன், ஏழாம் திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலை தாங்குகிறார்.
பாளை தூய சவேரியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பொறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை சபாநாயகர் அப்பாவு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 69 கல்லூரிகளை சேர்ந்த 6,361 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று (ஆக.09) திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங், அதிமுக நிர்வாகி சேலம் சண்முகம் உள்ளிட்ட 8 அரசியல் கொலைகள் ஒரே மாதத்தில் நடைபெற்றுள்ளது. விடியல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கார்பருவ நெல் சாகுபடியை கருத்திற்கொண்டு 2853 மெட்ரிக் டன் D.A.P மற்றும் COMPLEX உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து இன்று (ஆக.09) ரயில் மூலம் திருநெல்வேலி வந்து சேர்ந்தன. இவை அந்தந்த மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும்.
“நம்ம ஊரு சூப்பர்” என்ற திட்டத்தின்கீழ் நாளை (ஆக.10) ஊரகப்பகுதிகளில் உள்ள வீடுகள் விற்பனை நிலையங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு தடை செய்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணி, கை பிரதி மற்றும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் “தமிழ்ப் புதல்வன்” என்ற முதல்வரின் கனவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 69 கல்லூரிகளைச் சேர்ந்த சேர்ந்த 6361 மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 9) வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 7058 மாணவிகள் பயனடைவதாக நெல்லையில் இன்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் நாளை பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக நிர்வாகிகளுக்கு அப்துல் வகாப் இன்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநகர செயலாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டுமே அறிவிப்பாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும் என நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நாளை (ஆக.10) மேயராக காலை 10.30 மணி அளவில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்க உள்ளார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு படிவம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் மீதமுள்ள 75% பண பலன்களை வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வனப்பகுதிக்குள் உள்ள அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையில் இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கும், மாஞ்சோலையில் சுற்றுலா செல்வதற்கும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.